வெளிச்சம்
வெளிச்சம் மங்கிக் கொண்டிருந்த சாயங்கால வேளை. கன்னியம்மாவின் மனசு சரியில்லை. இப்போதெல்லாம் அவளுக்கு மணிமாறனைப் பற்றி ஒரே கவலை. மணிமாறன் அவளது ஒரே பையன். ரொம்ப கஷ்டப்பட்டு நாலு வீட்டில் வேலை செய்து நல்ல துணிமணிகள் போட்டு அவனை எப்படியோ ஸ்கூலுக்கு அனுப்பிக் கொண்டிருந்தாள். ஆனால் இப்போதெல்லாம் சாயங்காலம் விளையாடப் போறேன் என்று சொல்லிவிட்டு எங்கோ போய் சில கெட்ட பயல்களுடன் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தான் மணிமாறன்.
பக்கத்து வீட்டு ஆயா ஒரு குட்டிச் சுவற்றின் மேல் குரங்குகளைப் போல அவள் மகனும் சில பசங்களும் உட்கார்ந்து பீடி குடிப்பதாகச் சொல்லிவிட்டாள். அதிலிருந்து கன்னியம்மாவுக்கு சோறே இறங்கவில்லை. அவ்னை அடித்தோ திட்டியோ அவளுக்கு பழக்கமில்லை. ம்ற்ற அம்மாக்களை போல அவள் மணிமாறனை வளர்க்கவில்லை. நல்லா இருட்டிவிட்டது. மணிமாறன் மெல்ல வீட்டுக்கு வந்தான். அவன் மேலிருந்து வந்த வாடை பீடியைப் போல் இல்லை. அது அவளுக்கு பரிச்சயமான ஒரு வாடைதான். அவள் இருக்கும் ஏரியாவில் நிறைய பேர் வாழ்க்கையைக் கெடுத்த அந்த கஞ்சா வாடை அவளுக்கு ந்ன்றாகவே தெரியும்.. தூக்கி வாரிப்போட்டது அவளுக்கு. அன்று அவள் அது பற்றி அவனிடம் எதுவும் பேசவில்லை.
அடுத்த நாள் காலையில் அவன் ஸ்கூலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். “மணிமாறா! இங்க வா!” என்று அவனை அழைத்தாள். அவன் அருகில் வந்தான். “இன்னைக்கு இஸ்கூலுக்கு போக வேண்டாம். அம்மாவோட வா!” என்றாள். அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான். பின் தலையை ஆட்டினான்.
வீட்டைப் பூட்டிவிட்டு அவள் கடைத் தெருவுக்கு நடந்தாள். முதலில் அவள் பூக்கடைக்கு சென்றாள். அங்கு கோமதி அக்கா பூ வித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பதாக நொந்து கொண்டாள். அவள் மகன் சுப்ரமணி அருகில் கிழிந்த டவுசருடன் மூக்கு ஒழுக நின்று கொண்டிருந்தான். அவனுக்கு வயசு அஞ்சு ஆனால் கோமதி அவனை இன்னும் பால்வாடியில் சேர்க்கவில்லை. அது மணிமாறனுக்கு தெரியும். கன்னியம்மா அவளிடம் பூ வாங்கிக் கொண்டாள். அங்கிருந்து மாரியம்மன் கோவிலுக்கு போனாள். அங்கு ஒரு கிழவி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். கன்னியம்மா அவளிடம் பேச்சுக் கொடுத்தாள். அந்த கிழவி தனக்கு நாலு மகன்கள் இருப்பதாக சொன்னாள். ஆனால் அவர்களால் அவளுக்கு சோறு கூட போட முடியவில்லை. அவர்கள் எல்லாரும் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். சம்பாதித்த காசில் சாராயம் குடித்துவிட்டு பட்டினி கிடப்பார்களாம். அதனால்தான் அந்தக் கிழவிக்கு இந்த கதி.
கோயிலுக்கு வெளியே சில இளைஞர்கள் கட்சிக் கொடிகளை கம்பத்தில் கட்டிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஏதொ சண்டை ஆரம்பித்தது. ஒரு பையனை மற்றவர்கள் சேர்ந்து அடி அடியென்று விரட்டி விரட்டி அடித்தார்கள். ஒரு வயதான அம்மா அங்கு வந்து ‘அய்யோ அம்மா’ என்று அழ ஆரம்பித்தாள். “டேய்! என் மவனைப் போட்டு அடிக்காதீங்கடா!” என்று கதறினாள். யார் காதிலும் அது விழவில்லை. சில பெண்கள் வந்து அந்த அம்மாவுடன் சேர்ந்து கத்திக் கூப்பாடு போட்டார்கள். அடி வாங்கியவன் கீழே விழுந்து கிடந்தான். அவனை நாலு பேர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள். போலீஸ்காரர்கள் வந்து எல்லோரையும் விரட்டி அடித்தார்கள். மணிமாறனும், கன்னியம்மாவும் பயந்து கோயிலுக்குள் ஒடினார்கள்.
கொஞ்ச நேரத்தில் எல்லா சத்தமும் அடங்கிவிட்டது. அவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு கன்னியம்மா முதலில் வேலை செய்யும் வீட்டுக்கு வந்தார்கள். அந்த இரண்டு மாடி வீட்டில் இருந்தது ஒரு வயதான மாமாவும் அவரது மனைவியும்தான். மாமியின் மகன் வெளி நாட்டில் இருந்தான். கன்னியம்மா முதலில் துணிகளைத் தோய்த்தாள். மணிமாறன் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான். வெய்யில் இப்போது சுள்ளென்று அடிக்கத் தொடங்கியிருந்தது. பின் எச்சில் பாத்திரங்களைக் கழுவ அரைமணி நேரம் பிடித்தது. கன்னியம்மாவின் முகம் வெயிலில் கருத்து வாட ஆரம்பித்தது. பின் வீட்டைக் கூட்டத் தொடங்கினாள். பார்த்துப் பார்த்து கட்டியிருந்த பெரிய வீடு அது. அதை கூட்டி, மெழுகி சுத்தம் செய்ய ஒரு மணி நேரம் ஆனது. மணிமாறனுக்கு பசித்தது, இந்நேரம் பள்ளியில் சத்துணவு தின்னு கொண்டிருப்பான். மாமி அவளுக்கும், மணிமாறனுக்கும் ஒரு டம்ளர் காப்பி கொடுத்தாள். “அம்மா பாவம். வெறும் காப்பியை குடித்துவிட்டு எப்படி இவ்வளோ வேலை செய்றாங்க…” என்று ம்னதிற்குள் நினைத்துக் கொண்டான் மணிமாறன். மாமியின் வீட்டு சுவற்றில் அவளது மகன் வெளிநாட்டில் பட்டம் வாங்கும் படம் இருந்தது. அதைப் ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான் மணிமாறன்.
அவர்கள் காப்பி குடித்துக் கொண்டிருக்கும் போது வெள்ளை வேட்டியும், சட்டையுமாக ஒரு கும்பல் வந்து மாமி வீட்டு வாசலில் நின்றது. கோயில் வாசலில் அந்தப் பையனைப் போட்டு அடித்த அதே கும்பல்தான் இது. மாமி வெளியில் போய் பார்த்தாள். கோயில் கும்பாபிஷேகம் என்று அவர்கள் பணம் கேட்டார்கள். மாமியும் இருபது ரூபாய் கொடுத்தாள். “இன்னா மாமி? 500 ரூபாய் குடுங்க!” என்று ஒருவன் கேட்டான். “அதெல்லாம் முடியாது! நாங்க எங்க குலதெய்வத்துக்கு இந்த் வருஷம் 1000 ரூபாய் குடுத்திருக்கோம். எல்லா சாமியும் ஒண்ணுதான்.” என்று சொல்லி மாமி கதவை அடைத்தாள். அந்த கும்பல் நகர்ந்தது.
இப்படி கன்னியம்மா இன்னும் மூன்று வீடுகளில் வேலைகளை முடித்தாள். மணி மூன்றானது. நேராகக் கறிக்கடைக்கு போனாள். அங்கு அன்வர் தன் ஆறு வயது மகனுக்கு ஆடு வெட்ட சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவள் அங்கிருந்து கால் கிலோ கறி வாங்கிக் கொண்டாள். பின் வீட்டுக்குப் போய் கறிக்குழம்பு வைத்து மணிமாறனுக்கு வயிறு நிறைய சோறு போட்டாள். அவளும் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் தூங்கிப் போனாள். மணிமாறனுக்கு அழுகையாய் வந்தது. தான் ஒரு சரியான முட்டாள் என்று நினைத்துக் கொண்டான். அவனுக்குத் தூக்கம் வரவில்லை. வெளியே போய் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரத்தில் அவன் கிளாஸில் படிக்கும் சரவணன் அங்கே வந்தான். “வாடா போலாம்!” என்று அழைத்தான். மணிமாறன் பின்னாலேயே சென்றான். அடுத்த தெருவில் வள்ளி அவள் குழந்தை மஞ்சுவை இடுப்பில் வைத்து, சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். மஞ்சு பாப்பா வாய் நிறைய சோறோடு மணிமாறனையே உத்துப் பார்த்தது. மணிமாறனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் ஓடினான். “டேய், டேய்!” என்று ச்ரவணன் தூரத்தில் கத்துவது மட்டும் கேட்டது.
Add comment அக்டோபர் 27, 2009
பெண் எழுத்தாளர்
நாள் முழுதும் அவள்
உலகின் எலும்புகளுடன் சதுரங்கம் ஆடுகிறாள்.
இசைவாக (திடீர் மழை
ஜன்னல் வெளியே) சுருண்டு கிடக்கிறாள் -
பஞ்சணைகளில்
இடையிடையே தீஞ்சுவைத் தித்திப்புகள் கொறிக்கிறாள்.
அங்கு மினுக்கப்பட்ட மரப் பெட்டகங்கள்
மெல்லமாய் திட்டிக் கிறீச்சிடும்
கண்ணாடித் தோட்ட ரோஜாச்செடிகள்
இறவாப் பூக்களை உதிர்த்திடும்
சிக்கென்று பெண்மையாய்
இளஞ்சிவப்பு முலைகளுமாய்
ரோஜா நிறக் காகிதச் சுவர்களிடை
சாக்லேட் கனவுகள் வளர்க்கிறாள்.
அவள் விரல்களில் ஜொலிக்கும்
கார்னெட் கற்கள்
எழுத்துப் பிரதியில் இரத்தம் பிரதிபலிக்கும்
கல்லறையில் கிடக்கும் அழுகல் பூக்களின்
திகட்டும் வாடையில் திளைக்கிறாள்.
நுட்பமான உருவகங்களில் தொலைந்து
தெருக்களில் அழும் சாம்பல் குழந்தை முகங்களிலிருந்து
ஒளிகிறாள்.
Female Author
Sylvia Plath
All day she plays at chess with the bones of the world:
Favored (while suddenly the rains begin
Beyond the window) she lies on cushions curled
And nibbles an occasional bonbon of sin.Prim, pink-breasted, feminine, she nurses
Chocolate fancies in rose-papered rooms
Where polished higboys whisper creaking curses
And hothouse roses shed immortal blooms.The garnets on her fingers twinkle quick
And blood reflects across the manuscript;
She muses on the odor, sweet and sick,
Of festering gardenias in a crypt,And lost in subtle metaphor, retreats
From gray child faces crying in the streets.
Add comment ஆகஸ்ட் 12, 2009
ஜெனிஃபெர் ஆன்ட்டியின் புலிகள் – ஏட்ரியன் ரிச்
திரையின் மேல் பாயும் ஜெனிஃபெர் ஆன்ட்டியின் புலிகள்
பச்சை உலகில் வைடூர்ய பிறவிகளாய் ஒளிரும்
மரத்தடியில் மனிதர்கள் – அவை அஞ்சுவதில்லை
உறுதியாய் தெளிவாய் உலவிடும் மிடுக்காய்.
கம்பளி மேல் தத்தளிக்கும் ஆன்ட்டியின் விரல்கள்
தந்த ஊசியை இழுக்கவும் திணரும்
அங்க்கிளின் திருமண மோதிரம் சுமையாய்
ஆன்ட்டியின் கையை அழுத்திடும் கனமாய்.
ஆன்ட்டி இறந்த பின் அவளது கைகள்
இன்னமும் இன்னல்களில் பிணைந்து இருக்கும்
திரையின் மீது அவள் பின்னிய புலிகளோ
பயமின்றி பாய்ந்து கொண்டிருக்கும் பெருமிதமாய்.
Aunt Jennifer’s Tigers
Adrienne Rich
Aunt Jennifer’s tigers prance across a screen,
Bright topaz denizens of a world of green.
They do not fear the men beneath the tree;
They pace in sleek chivalric certainty.Aunt Jennifer’s fingers fluttering through her wool
Find even the ivory needle hard to pull.
The massive weight of Uncle’s wedding band
Sits heavily upon Aunt Jennifer’s hand.When Aunt is dead, her terrified hands will lie
Still ringed with ordeals she was mastered by.
The tigers in the panel that she made
Will go on prancing, proud and unafraid.
Add comment ஆகஸ்ட் 5, 2009
மாற்றம் – ஷார்லட் சொலொடொவ்
வெயில் காலம் சூரிய வெளிச்சத்துடன்
இன்னமும்
இனிமையாக கனக்கிறது
சென்ற வருடத்தைப் போலவே
இலையுதிர் காலமும்
பொன்னிறமும் ஆழ் சிவப்புமாய்
இன்றும் வருகிறது
சென்ற வருடத்தைப் போலவே
பனிக்காலமும்
பளிச்சென்று வெண்மையாய்
சில்லிடுகிறது
சென்ற வருடத்தைப் போலவே
வசந்த காலம்
நள்ளிரவில் எப்போதும் போல்
கிசுகிசுப்பாக வருகிறது
மாறியிருப்பதோ நான் மட்டும்தான்.
தமிழாக்கம்: மாதங்கி
Change
Charlotte Zolotow
The summer
still hangs
heavy and sweet
with sunlight
as it did last year.The autumn
still comes
showering gold and crimson
as it did last year.The winter
still comes
clean and cold and white
as it did last year.The spring
still comes
like a whisper in the dark night.It is only I
who have changed.
Add comment ஆகஸ்ட் 5, 2009
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது தெரியுமா? – மாயா ஆஞ்செலோ
ஒரு சுதந்திரப் பறவை காற்றின் முதுகில் தாவி
ஆற்றின் ஓட்டத்திற்கு அப்பாலும் மிதந்து
ஆதவனின் ஆரஞ்சு கதிர்களில் அமிழ்ந்து
ஆகாயத்தை தனதாக்கிக் கொள்ள முனையும்.
ஆனால்
நெறுக்கும் கூண்டுக்குள் நடக்கும் பறவைக்கு
கோபக் கம்பிகளின் வழியே ஏதும் தெரிவதில்லை
முறிக்கப்பட்ட சிறகுகளும்
கட்டப்பட்ட கால்களுமாய்
குரலை மட்டும் திறந்து பாடும்.
பயம் தோய்ந்த குரலில் பறவை பாடும் அதில்
தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ளும் ஏக்கம்
தொலைதூர மலையிலும் அதன் ஒலி கேட்கும்
ஏனெனில் அது ஒரு சுதந்திர கீதம்.
சுதந்திரப் பறவை ஒரு தென்றலை வேண்டும்
மரங்களின் பெருமூச்சில் விளையும் மென்காற்றும்
வெளிர்காலை புற்களில் புதுப்புழுக்கள் கிடைக்கும்
வானத்தை அப்பறவைத் தனதென ஆக்கும்.
கூண்டுப் பறவையோ கனவுகளின் கல்லறை மேல்
துர்சொப்பனங்களின் நடுவில் கதறும் அதன் நிழல்
முறிக்கப்பட்ட சிறகுகளும்
கட்டப்பட்ட கால்களுமாய்
குரலை மட்டும் திறந்து பாடும்.
பயம் தோய்ந்த குரலில் பறவை பாடும் அதில்
தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ளும் ஏக்கம்
தொலைதூர மலையிலும் அதன் ஒலி கேட்கும்
ஏனெனில் அது ஒரு சுதந்திர கீதம்.
தமிழாக்கம்: மாதங்கி
I know why the caged bird sings
Maya Angelou
A free bird leaps on the back of the wind
and floats downstream till the current ends
and dips his wing in the orange suns rays and dares to claim the sky.But a bird that stalks down his narrow cage
can seldom see through his bars of rage
his wings are clipped and his feet are tied so he opens his throat to sing.The caged bird sings with a fearful trill
of things unknown but longed for still
and his tune is heard on the distant hill
for the caged bird sings of freedom.The free bird thinks of another breeze
and the trade winds soft through the sighing trees
and the fat worms waiting on a dawn-bright lawn and he names the sky his own.But a caged bird stands on the grave of dreams
his shadow shouts on a nightmare scream
his wings are clipped and his feet are tied so he opens his throat to sing.The caged bird sings with a fearful trill
of things unknown but longed for still
and his tune is heard on the distant hill
for the caged bird sings of freedom.
1 comment ஆகஸ்ட் 4, 2009
